வயநாடு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவதாக அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத் தேர்தல் பாஜக வேட்பாளராக நவ்யா ஹரிதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காலியாக இருந்த அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 13ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில மகிளா மோர்ச்சா மாநில பொதுச் செயலாளர் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்தது. இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோகேரி வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Night
Day