வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகரித்த முட்டை விலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு முட்டை கொள்முதல் விலை 5 ரூபாய் 90 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள் வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து, 5 ரூபாய் 90 காசுகளாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயித்துள்ளது. முட்டை உற்பத்தி குறைவு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிப்பு போன்ற காரணங்களால் முட்டை விலை அதிகரித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். 

Night
Day