வரி ஏய்ப்பு புகார் எதிரொலி - பிரபல நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் செயல்படும் பிரபல நகைக்கடை மற்றும் அதன் உரிமையாளர்கள் வீடுகளில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

திண்டுக்கல்லில் தினேஷ் மற்றும் தீரஜ் சகோதரர்கள் பிரபல நகை கடையை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான ஒட்டன்சத்திரத்தில் உள்ள பிரபல நகைக் கடையில் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், நகை கடை மற்றும் வீடுகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Night
Day