வரி செலுத்தாத 11 கடைகளுக்கு சீல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் கடந்த ஓராண்டிற்கு மேலாக வரி செலுத்தாமல், வர்த்தக உரிமம் பெறாமல் இயங்கிய உணவங்கள், கடைகள் என மொத்தம் 11 கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

சென்னை மாநராட்சியின், 190வது வார்டுக்கு உட்பட்ட பள்ளிக்கரணை, தாம்பரம்-வேளச்சேரி சாலையில் ஏராளமான சிற்றுண்டி கடைகள் உள்ளன. அவற்றில், 11 கடைகள் ஓராண்டிற்கு மேலாக வரி செலுத்தாமலும், வர்த்தக உரிமம் பெறாமலும் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வருவாய் துறையினர் கடந்த மாதம் முறைப்படி நோட்டீஸ் வழங்கினர். அதனை கடை உரிமையாளர்கள் உதாசினப்படுத்திய நிலையில், வருவாய் துறை அலுவலர்கள், 11 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

Night
Day