வரி வசூலுக்கு கடப்பாரையுடன் சென்ற நகராட்சி ஊழியர்கள் - நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியரிடம் கோரிக்கை மனு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வரி வசூல் செய்ய கடப்பாரை மற்றும் மண்வெட்டியுடன் சென்ற நகராட்சி ஊழியர்களின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. 


செங்கோட்டை வீரகேரள விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருபவர்கள், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் செங்கோட்டை நகராட்சி ஊழியர்கள் கடப்பாரை மற்றும் மண்வெட்டியுடன் சென்று வீட்டு வரி கட்டவில்லை என்றால் வீட்டை இடித்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நகராட்சி ஊழியர்கள் கடப்பாரை மற்றும் மண்வெட்டியுடன் வரி வசூல் செய்ய வந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.

Night
Day