வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு - சீமான் நாளை ஆஜராக திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை ஆஜராக வேண்டுமென திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திருச்சி சரக DIG வருண்குமார், அவருடைய குடும்பத்தினர் குறித்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்டு DIG வருண்குமார் சார்பில் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை 3 முறை நடைபெற்றது. கடந்த முறை சீமான் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் சீமான ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்று 4வது முறையாக வழக்கு விசாரணைக்கு வந்த போது டிஐஜி வருண்குமார் நேரில் ஆஜரானார். ஆனால் சீமான் ஆஜராகாத காரணத்தால் நாளை ஆஜராக வேண்டுமென நீதிபதி விஜயா உத்தரவிட்டுள்ளார்.

Night
Day