வரும் 15-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - பாலச்சந்திரன் தகவல்

எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கையை ஒட்டி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிகன மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், 
அடுத்துவரும் 2 தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்தார். அடுத்துவரும் 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் பாலச்சந்திரன் கூறினார்.

தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறினார். 

மன்னார் வளைகுடா, குமரிக்கடல், கச்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வரை காற்றுவீசும் என்பதல் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை கடந்த அக்டோர் 1 முதல் இன்று வரையிலான கால கட்டத்தில் தமிழகம் புதுவை காரைக்காலில் 45 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாகவும், இது இயல்பை விட 16 சதவீதம் அதிகம் என்றும் பாலச்சந்திரன் கூறினார்.

தொடர்ந்து பேசிய பாலச்சந்திரன், பிற்பகல் 2 மணி வரை சென்னையில் அதிகபட்சமாக நெற்குன்றத்தில் 10 சென்டி மீட்டரும், மீனம்பாக்கத்தில் 8 சென்டி மீட்டரும், அண்ணா பல்கலைக் கழம் மற்றும் தரமணி 7 சென்டி மீட்டரும், பூந்தமல்லி மற்றும் நந்தனத்தில் 6 சென்டி மீட்டரும், கொளப்பாக்கத்தில் 5 சென்டி மீட்ரும் மழை பதிவாகியுள்ளதாக கூறினார். டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை மயிலாடுதுறையில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Night
Day