வரும் 25,26 தேதிகளில் பல்கலை., துணைவேந்தர்கள் மாநாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 வரும் 25, 26 ஆகிய இரண்டு நாட்கள் பல்கலைக் கழங்களின் துணைவேந்தர்கள் மாநாடு  நடைபெறவுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கவுள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டில் உள்ள 48 மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரே தொடர்கிறார் என்றும் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day