எழுத்தின் அளவு: அ+ அ- அ
வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 41 ரூபாய் குறைந்துள்ளது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்த மாதம் இன்று முதல் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை 41 ரூபாய் குறைத்து அறிவித்துள்ளன. இதன்படி டெல்லியில் கடந்த மாதம் ஆயிரத்து 803 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் விலை தற்போது ஆயிரத்து 762 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த மாதம் ஆயிரத்து 965 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட 19 கிலோ எடையுள்ள வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் ஆயிரத்து 921 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொல்கத்தாவில் கடந்த மாதம் ஆயிரத்து 913 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் 41 ரூபாய் குறைந்து ஆயிரத்து 872 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் கடந்த மாதம் ஆயிரத்து 755 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட 19 கிலோ எடையிலான வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் ஆயிரத்து 714 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.