வலுவடைந்தது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இதனால், தமிழ்நாட்டில் வரும் 23, 24 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வட தமிழக கடற்கரையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவி வருகிறது. அது இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் நிலைகொண்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகடலோர மாவட்டங்கள், மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் இன்று லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாகவும், நாளை முதல் 24ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day