வளைகாப்பு, சீர்வரிசை வழங்கும் விழாவில் எம்.பி., எம்.எல்.ஏ 5 மணி நேரம் தாமதமாக வந்ததால் கர்ப்பிணிகள் அவதி..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு நடைபெறவிருந்த வளைகாப்பு, சீர்வரிசை வழங்கும் விழாவில் எம்.பி., எம்.எல்.ஏ  5 மணி நேரம் தாமதமாக வந்ததால் கர்ப்பிணிகள் அவதியடைந்தனர். 


திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் , எம்.பி. ராணி ஸ்ரீகுமார் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் வருகைக்காக கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பல மணி நேரம் காத்து கிடந்துள்ளனர். 5 மணி நேரத்திற்கு பிறகு காலதாமதமாக வந்தததால், குடிநீர், கழிவறை என எந்த வசதியும் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். விளம்பர திமுக அரசின் அலட்சியம் காரணமாக  ஆயிரம் கர்ப்பிணிகள் அவதியடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day