வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க தேர்தல் ஆணையம் முடிவு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


நாடு முழுவதும் பலருக்கு ஒரே வாக்காளா் அடையாள எண் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள் இப்பிரச்சினையை நாடாளுமன்றத்திலும் எழுப்பின. இதையடுத்து இவ்விவகாரத்தில் தீர்வு காண, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது குறித்து கடந்த 18-ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. 

இதில் மத்திய உள்துறை, சட்டத்துறை மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணைய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இது தன்னார்வ நடவடிக்கையாகவே இருக்கும் என்றும் ஏற்கெனவே, 65 கோடி பேர் ஆதாரை இணைத்துள்ளதாகவும் கூறியுள்ளது. 

Night
Day