வாடிக்கையாளர்களை பாதுகாக்க ஆட்டோவின் மேற்புரத்தில் கூரை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோடை காலத்தில் தனது வாடிக்கையாளர்களை பாதுகாக்க, ஆட்டோவின் மேற்புரத்தில் கூரை அமைத்து குளு குளு பயணத்தை ஏற்டுத்தி தரும் சேலத்தை சேர்ந்த 75 வயது ஓட்டுநருக்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சேலம் குரங்குசாவடி பகுதியைச் சேர்ந்த 75 வயது ஆட்டோ ஓட்டுநர் சுப்ரமணி. தனது வாடிக்கையாளர்களை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க, தனது ஆட்டோவின் மேல் பகுதியில் சோளத் தட்டுகளை பரப்பி, அதன் மீது தண்ணீர் சொட்டு சொட்டாக ஊற்றும் வகையில் மின்மோட்டாரை அமைத்துள்ளார். மேலும், பயணிகளின் தாகம் தணிக்க குடிநீர், சிறிய அளவிலான பேட்டரி மின்விசிறி, மொபைல் சார்ஜ் செய்யும் வசதியும் இயற்கை ஏசி ஆட்டோவில் இடம் பெற்றுள்ளன. இதற்கென தனிக்கட்டணம் ஏதும் ஆட்டோ ஓட்டுநர் சுப்பிரமணி வசூலிப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day