வாயு கசிவு ஏற்பட்ட பள்ளியில் சுற்றுப்புற காற்றின் தரம் ஆய்வு செய்யப்பட்டது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவொற்றியூரில் வாயுகசிவு ஏற்பட்ட விக்டரி தனியார் பள்ளியில் மாசு கட்டுப்பட்டு வாரியம் சார்பில் 3 நாட்கள் நடைபெற்ற காற்று தர ஆய்வு முடிவடைந்தது. கடந்த மாதம் 25-ம் தேதி மற்றும் கடந்த 4-ம் தேதி என 2 முறை வாயுகசிவு ஏற்பட்டு மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில், தனியார் பள்ளிகள் இயக்குனரின் உத்தரவையடுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக பள்ளியில் சுற்றுப்புற காற்றின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. சோதனை அறிக்கை தயார் செய்யும் பணியில் மாசு கட்டுப்பாடு வாரியம் ஈடுபட்டுள்ளது. இந்த சோதனையில் காற்றில் அமோனியா கலந்திருப்பது உறுதி செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், திங்கட்கிழமை பள்ளி திறக்கப்படும் என்றும், தேவையில்லாமல் வீண் வதந்தி, புரளி கிளப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day