வாரிசு அரசியலையும் ஊழல் அரசியலையும் தாங்க இதயத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் - வானதி சீனிவாசன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வாரிசு அரசியலையும் ஊழல் அரசியலையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றால் இதயத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். உலக இதய தினத்தை முன்னிட்டு கோவை பந்தய சாலை பகுதியில் தனியார் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதயத்தை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைப்பதற்கு பல்வேறு பழக்க வழக்கங்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பதாக தெரிவித்தார். வாரிசு அரசியலையும் ஊழல் அரசியலையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றால் இதயத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதற்காகவே இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகவும் தெரிவித்தார். 

Night
Day