விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 82.48% - தேர்தல் ஆணையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 
நிறைவடைந்த நிலையில், 82.48 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி உயிரிழந்ததை அடுத்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என, மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக, 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இந்நிலையில் தேர்தலில் 82 புள்ளி 48 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Night
Day