விக்கிரவாண்டி குழந்தை உயிரிழந்த சம்பவம் - பள்ளி தாளாளர், முதல்வருக்கு நீதிமன்றக் காவல்

எழுத்தின் அளவு: அ+ அ-

பள்ளி குழந்தை பலியான விவகாரத்தில் ஆசிரியை ஏஞ்சலைக்கு வரும் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சத்ய நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.  குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் , பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர், ஆசிரியர் ஆகியோரை  தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் 3 பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் பள்ளி முதல்வர் மற்றும் தாளாளருக்கு ரத்த கொதிப்பு இருந்த நிலையில், இருவரும் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் ஏஞ்சலையை மட்டும் விக்கிரவாண்டியில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை வரும் 10 ஆம் தேதி வரை  நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சத்யநாராயணன் உத்தரவிட்டுள்ளார். 

Night
Day