விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உடல் நலக்குறைவால் காலமானார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 

விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் புகழேந்தி பதவி வகித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, திடீரென புகழேந்தி மயங்கி கீழே விழுந்துள்ளார். 

இதனையடுத்து, முண்டியம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி எம்எல்ஏ புகழேந்தி உயிரிழந்தார். 

அவரது உடல் சொந்த ஊரான அத்தியூர் திருவாதி கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, நாளை மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. மறைந்த எம்எல்ஏ புகழேந்தி, ஊராட்சி மன்ற தலைவர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர், கோலியனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

varient
Night
Day