விசிகவின் துணை பொதுச்செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னை வேப்பேரி, தேனாம்பேட்டை, ஆர்.ஏ.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் ஆதவ் ஆர்ஜுன் என்பவரின் அரைஸ் நிறுவனத்தில், அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் ஆர்.ஏ.புரத்தில் உள்ள கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்தாரான செல்வராஜ் என்பவர் வீட்டிலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 

கோவை மாவட்டம் கிருஷ்ணசாமி நகரில் உள்ள கார் ஷோரூமின் உரிமையாளரான அனீஸ் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

varient
Night
Day