எழுத்தின் அளவு: அ+ அ- அ
தேமுதிக நிறுவனத் தலைவரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலர் அஞ்சலி செலுத்தினார்.
தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவுதின நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெ. ஜெயலலிதா இல்லத்தில் இருந்து அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா புறப்பட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்குச் சென்றார்.
அங்கு அமைந்துள்ள விஜயகாந்த் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு, விஜயகாந்த் நினைவிடத்தில் புரட்சித்தாய் சின்னம்மா அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள், தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே. சுதிஷ் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா ஆறுதல் தெரிவித்தார்.