விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா 6 மாதம் இடைநீக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆறுமாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சித் தலைமையின் அறிவுறுத்தலை மீறி தொடர்ச்சியாக ஆதவ் அர்ஜுனா எதிர்மறையாக செயல்பட்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனா நடவடிக்கை, கட்சி தலைமையின் மீதான நன்மதிப்பையும், நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தலைமை நிர்வாக குழு எடுத்த முடிவின்படி, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானித்து கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா ஆறுமாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day