விண்ணை பிளக்கும் 'சின்னம்மா வாழ்க' முழக்கத்துக்கு மத்தியில் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலான அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வடக்கு விஜயநாராயணம் பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் பழைமையான இந்தக் கோவிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. 8ம் நாள் திருவிழாவை முன்னிட்டு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வடக்கு விஜயநாராயணம் பகுதிக்கு வந்தார். 

இதனை தொடர்ந்து, சாரட் வண்டி ஒன்றில், புரட்சித்தாய் சின்னம்மாவை கிராம மக்கள், அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோயிலுக்கு பேரணியாக அழைத்து சென்றனர்.

தரிசனத்துக்கு பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, அனைத்து மக்களும் கரகோஷத்துடன் வரவேற்பு அளித்தனர். 

பொதுமக்களை பார்த்து கையசைத்து புரட்சித்தாய் சின்னம்மா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். திறந்தவேனில் ஏறி பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வணக்கம் தெரிவித்தார். 

கோயில் தரிசனத்திற்கு பின்னர் புரட்சித்தாய் சின்னம்மா, அங்கிருந்து புறப்பட்டபோது, சின்னம்மாவை சந்தித்த கிராமமக்கள், தங்கள் கிராமத்திற்கு வருகைதந்த சின்னம்மாவை மகாராணியாகவும், வேலுநாச்சியாராகவும் பார்ப்பதாகவும், அடுத்தமுறை முதலமைச்சராக இப்பகுதிக்கு வரவேண்டும் என்றும் தெரிவித்தனர். 

Night
Day