விதி மீறிய மனமகிழ் மன்றங்கள் மீது நடவடிக்கை - ஐகோர்ட் அமர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

மனமகிழ் மன்றங்கள் விதிகளின்படி செயல்படுகிறதா? என்பது குறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்ய மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

விதிகளை மீறி செயல்படும் மனமகிழ் மன்றங்களின் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனமகிழ் மன்றங்கள் விதிகளின்படி செயல்படுகிறதா? என்பது குறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்ய மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மனமகிழ் மன்றங்கள் விதிகளின் படி இயங்குவதை உறுதி செய்வது அரசின் கடமை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

varient
Night
Day