விருதுநகர்: கல்குவாரி வெடி விபத்தில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்த விவகாரம் - அதிகாரிகள் ஆய்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 2வது நாளாக கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆவியூர்-கீழ உப்பிலிக்குண்டு சாலையில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் நேற்று காலை பாறைகளை வெடிக்க வைக்கக்கூடிய வெடி மருந்துகளை ஒரு அறையில் இருந்து எடுத்து வைத்தபோது, உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். விதிகளை மீறி செயல்பட்டு வரும் கல்குவாரியை மூட வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், 2வது நாளாக வருவாய் துறை, காவல்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Night
Day