விருதுநகர்: மருத்துவ கழிவு எரியூட்டும் ஆலைக்கு எதிர்ப்பு - போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே தனியார் மருத்துவ கழிவு எரியூட்டும் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்புகொடி கட்டி போராட்டம் நடத்தினர். 
உண்டுருமிகிடாக்குளம் பகுதியில் உள்ள மருத்துவக் கழிவுகளை எரியூட்டும் தனியார் தொழிற்சாலையில் கழிவுகள் எரியூட்டி அழிப்பதால் அப்பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்டவை ஏற்படுகிறது. இதனால் கடந்த 2023-ல் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவின்படி ஆலை மூடப்பட்டது. இந்த நிலையில் ஆலையை மீண்டும் திறப்பது குறித்து உயர்நீதிமன்ற கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி முடுக்கன்குளம், திம்மாபுரம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வீடுகளில் கருப்புகொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

Night
Day