எழுத்தின் அளவு: அ+ அ- அ
உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், சீறி வந்த காளைகளை, மல்லுக்கட்டி அடக்கிய காளையர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும், பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் உள்ள முனியான்டி திடலில் இன்று காலை 7.20 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. மாடுபிடி வீரா்களின் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கிய இந்த போட்டியில், முதல் சுற்றில் மஞ்சள் நிற சீருடையணிந்து 50 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 40 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், அவற்றில் 7 காளைகள் பிடிபட்டன. அதிகபட்சமாக 2 மாடுகள் பிடித்த மதுரை ஊர்சேரி சரவணக்குமார் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்நிலையில், மாடுகள் முட்டியதில் மாடுபிடி வீரர், மாட்டின் உரிமையாளர், பார்வையாளர் என 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர் மேல் சிகிச்சைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டடார்.
2வது சுற்றில் பிங்க் நிற சீருடை அணிந்து களமிறங்கிய 50 மாடுபிடி வீரர்கள், வாடிவாசலில் இருந்து சீறிபாய்ந்த 110 காளைகளில் 33 காளைகளை மட்டுமே அடக்கினர். இதில், பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டி அசத்தின. முதல் மற்றும் 2வது சுற்றில் 8 காளைகளை அடக்கி, சிவகங்கையை சேர்ந்த அபிசித்தர் முதலிடத்தில் நீடித்தார். அதனை தொடர்ந்து, கட்டிக்குளம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் 4 காளைகளை அடக்கி 2-வது இடத்திலும், பாலமுருகன் மற்றும் நல்லப்பா ஆகியோர் தலா 3 காளைகளை அடக்கி 3-வது இடத்திலும் நீடித்தனர்.
இதனிடையே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், அஇஅதிமுக புரட்சித்தாய் சின்னம்மா காளை பங்கேற்று வெற்றி பெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிய வந்த காளையை பிடிக்க முடியாமல், மாடுபிடி வீரா்கள் சிதறி ஓடினர்.
3வது சுற்றில் 205 காளைகளும், சாம்பல் நிற சீருடை அணிந்து 50 மாடுபிடி வீரர்களும் களமிறங்கப்பட்டது. வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்ட காளைகளில் 65 காளைகளை வீரர்கள் அடக்கினர். போட்டியில் தொடர்ந்து 11 காளைகளை அடக்கி சிவகங்கை சேர்ந்த அபிசித்தர் முதலிடத்தில் நீடித்தார். அதனை தொடர்ந்து, வலையங்குளம் பகுதியை சேர்ந்த பாலமுருகன், 7 காளைகளை அடக்கி 2வது இடத்திலும், கட்டிக்குளம் பகுதியை சேர்ந்த சிவசேரன், 6 காளைகளை அடக்கி 3வது இடத்திலும் நீடித்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், காவலர்கள், பார்வையாளர் உட்பட 19 பேர் காயமடைந்தனர். மேலும், காளை முட்டியதில் மாடுபிடி வீரருக்கு தொண்டையில் காயம் ஏற்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
4ம் சுற்றில் ஊதா நிற சீருடை அணிந்து களமிறங்கிய காளையர்கள், வாடிவாலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்ட 302 காளைகளில் 102 காளைகளை மட்டுமே அடக்கினர். சில காளைகள் வீரர்களுக்கு போக்கு காட்டியதுடன் வீரர்களுக்கு இணையாக களத்தில் நின்று விளையாடியது. போட்டியில் சிறப்பாக விளையாடிய அபிசித்தர், பாலமுருகன், தமிழரசன், சிவசேரன் ஆகிய 4 பேர் சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள் உட்பட 22 பேர் போட்டியில் காயமடைந்தனர்.
5ம் சுற்றில் 363 காளைகள், ஆரஞ்சு நிற சீருடையில் 50 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். அவிழ்த்துவிடப்பட்ட காளைகளில் 124 காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். 11 காளைகளை அடக்கி அபிசித்தர், திவாகர் முதலிடத்திலும், 7 காளைகளை அடக்கி பாலமுருகன், தமிழரசன் 2வது இடத்திலும் நீடித்தனர்.
பச்சை நிற சீருடையுடன் 6வது சுற்றில் களமிறங்கிய 50 மாடுபிடி வீரா்கள், வாடிவாசலில் இருந்து சீறி வந்த காளைகளை, போட்டி போட்டு கொண்டு அடக்க முற்பட்டனர். இதில் காளைகளை அடக்கிய காளையர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. 6வது சுற்றில், தலா 2 கானைகளை பிடித்த 4 வீரர்களும், 3 காளைகளை பிடித்த கருப்பாயூரணி கார்த்தி என 5 பேர் ஏழாம் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
7 வது சுற்று முடிவில், பூவந்தி பகுதியை சேர்ந்த அபிசித்தர், குன்னத்தூர் பகுதியை சேர்ந்த திவாகர், கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த கார்த்தி ஆகிய 3 மாடுபிடி வீரா்களும், தலா 11 காளைகளை அடக்கி முதலிடத்தில் நீடித்தனர்.
எட்டாம் சுற்று முடிவில், அபிசித்தர், திவாகர், கார்த்தி ஆகிய 3 மாடுபிடி வீரா்கள் தொடர்ந்து தலா 11 காளைகளை அடக்கி முதலிடத்தில் நீடித்தனர். இந்த சுற்று வரை மொத்தம் 652 காளைகள் களமிறக்கப்பட்டதில், 194 காளைகள் பிடிப்பட்டது. போட்டிகளில் காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும், பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதனிடையே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், அஇஅதிமுக புரட்சித்தாய் சின்னம்மா காளை பங்கேற்று வெற்றி பெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிய வந்த காளையை பிடிக்க முடியாமல், மாடுபிடி வீரா்கள் சிதறி ஓடினர். ஏற்கனவே காலையில் 2வது சுற்றில் ஒரு காளையும், தற்போது 8வது சுற்றில் ஒரு காளையும் வெற்றி பெற்றது.
9வது சுற்று முடிவில், வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்ட காளைகளில், 5 காளைகளுக்கு மேல் பிடித்த 10 மாடு பிடி வீரா்கள், இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். 9வது சுற்றில், 13 காளைகளை அடக்கி, கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்தி முதலிடத்தை பிடித்தார். 9வது சுற்று முடிவு வரை மொத்தம் 710 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டதில், 190 காளைகள் பிடிப்பட்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதி சுற்றான 10வது சுற்றில், வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரா்கள் போட்டி போட்டு கொண்டு அடக்க முற்பட்டனர். கார் பரிசை தட்டி செல்ல மாடு பிடி வீரா்களுக்கு இடையே இடையே கடும் போட்டி