விளம்பர திமுக அரசின் மொத்த கடன் ரூ.9 லட்சம் கோடி

எழுத்தின் அளவு: அ+ அ-

விளம்பர திமுக அரசு 2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. அதில் தமிழ்நாட்டின் மொத்த கடன் 8 லட்சத்து 23 ஆயிரத்து 707 கோடி ரூபாய் உள்ளது என தெரிய வந்துள்ளது.

விளம்பர திமுக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாட்டின் கடன் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 

ஆட்சியில் அமர்ந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்து கொண்டே சென்றது.

குறிப்பாக, 2021-22 ஆம் ஆண்டில் 5 லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாயாகவும், 2022-23 ஆம் ஆண்டில் 6 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாயாகவும் கடன் சுமை அதிகரித்தது.

அதேபோல், 2023-24 ஆம் ஆண்டில் 7 லட்சத்து 26 ஆயிரம்  கோடி ரூபாயாக இருந்த கடன், 2024-25ல் அதிகரித்து 8 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.

இவ்வளவு கடன் சுமையிலும் மீண்டும் 2025-26 ஆம் நிதி ஆண்டில் 1 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க விளம்பர திமுக அரசு திட்டமிட்டுள்ளது

இதனால் 2025-26 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் சுமை 9 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க உள்ளது

தமிழ்நாட்டில் தற்போதைய மக்கள் தொகை சுமார் 8 கோடியாக உள்ள நிலையில், இவர்கள் ஒவ்வொருவரின் தலையிலும் விளம்பர திமுக அரசு 1 லட்சத்து 16 ஆயிரத்து 244 ரூபாய் கடனை ஏற்றியுள்ளது

இதனால் நிதி மேலாண்மையை முறையாக திட்டமிட தெரியாத விளம்பர திமுக அரசால், ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்து, ஆட்சி நடத்தி வருவது அம்பலம் ஆகியுள்ளது

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 1 லட்சத்து 92 ஆயிரத்து 752 கோடி ரூபாயாகவும், வரியல்லாத வருவாய் 28 ஆயிரத்து 818 கோடி ரூபாயாகவும் உள்ளது

மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு கிடைக்கும் வரி பகிர்வு 52 ஆயிரத்து 491 கோடி ரூபாயாக உள்ள நிலையில், 

மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு வரும் உதவி மானியங்கள் 20 ஆயிரத்து 538 கோடி ரூபாயாக இருக்கிறது 

மாநில நிதிப் பற்றாக்குறை 2024-2025ம் ஆண்டில் 49 ஆயிரத்து 278 கோடி ரூபாயாகவும், 

2025-2026ம் ஆண்டில் 41 ஆயிரத்து 634 கோடி ரூபாயாகவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதால் நாளுக்கு நாள் வரி வருவாய் பற்றாக்குறை குறையுமென தகவல் வெளியாகியுள்ளது

Night
Day