எழுத்தின் அளவு: அ+ அ- அ
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாறாக புதிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரை அளிக்க அதிகாரிகள குழு அமைத்த விளம்பர திமுக அரசுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது அமைக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழு என்பது கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது விளம்பர திமுக அறிவித்த பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதிக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாறாக புதிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரை அளிக்க அதிகாரிகள் குழுவிற்கு ஒன்பது மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதன் மூலம், எந்த வகையிலும் பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படாது என்பதை தெளிவாக உணர்த்துவதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரைப்பது என்பது அரசு ஊழியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்திருப்பதாகவும், இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் நடவடிக்கை என்றும் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மீண்டும் மீண்டும் அதிகாரிகள் குழு அமைப்பது என்பது முதலமைச்சரின் மீதான நம்பகத்தன்மையை முற்றிலும் அழித்து விட்டதாக சாடியுள்ள அந்த சங்கம், அமைக்கப்பட்டுள்ள அலுவலர் குழுவில் அரசு ஊழியர்கள் ஆசியர்கள் தரப்பில் இருந்து ஒருவரைக் கூட நியமிக்காமல் இருக்கும் போதே கண்டிப்பாக இந்த குழு தங்களுக்கு எதிரான பரிந்துரைகளையே வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனால் முதலைமைச்சர் அறிவித்துள்ள அலுவலர்கள் குழுவை உடடினயாக கலைத்து விட்டு, தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வலியுறுத்தியுள்ளது.