எழுத்தின் அளவு: அ+ அ- அ
விளம்பர திமுக அரசின் நிதிநிலை அறிக்கை வெற்று விளம்பரங்களும், ஸ்டிக்கர்களும் நிறைந்த அறிக்கையாக உள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
விளம்பர திமுக அரசு 2026 - 26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த நிதிநிலை அறிக்கை குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் விளம்பர திமுக அரசின் நிதிநிலை அறிக்கையில் வழக்கம்போல் வெற்று அறிவிப்புகள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக விமர்சித்துள்ளார். தொழிற்பூங்காக்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், தொழிற்பேட்டைகள் என ஆண்டுதோறும் இடம் பெறுவதாகக் குறிப்பிட்டுள்ள எல்.முருகன் அவற்றை செயல்படுத்துவது எப்போது என்று கேள்வி எழுப்பியுள்ளார். முந்தைய அதிமுக அரசு செயல்படுத்தி வந்த கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை 4 ஆண்டுகாலம் முடக்கி வைத்துவிட்டு ஆட்சி முடியும் நிலையில் மீண்டும் செயல்படுத்தப்போவதாக கூறுவது, புதிய இளம் வாக்காளர்களை கவர்வதற்கான கேலிக்கூத்து என்று விமர்சித்துள்ளார்.