விளம்பர திமுக அரசு முறையாக சிறப்பு பேருந்துகளை இயக்காததால் சொந்த ஊர் செல்ல முடியாமல் மக்கள் அவதி..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்த மக்கள், தங்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னையில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், சொந்த ஊர் செல்லும் பொதுமக்களால் நிரம்பி வழிகிறது. 

இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் மக்களின் வசதிக்காக கடந்த 10 ஆம் தேதி முதல் நாளை வரை ஏற்கனவே இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் கூடுதலாக 5 ஆயிரத்து 736 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

ஆனால் கூடுதலாக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளை  அதிகாரிகள் சரியாக முறைப்படுத்தி இயக்காததால் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வருவதற்கு மிகவும் தாமதமாகிறது. இதனால் பயணிகள் பல மணி நேரம் பேருந்துக்காக காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக நேற்று நள்ளிரவு தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட பயணிகள் பலர் பேருந்துகள் கிடைக்காமல் பல மணி நேரம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. விளம்பர திமுக அரசு, சரிவர பேருந்துகளை இயக்காததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

Night
Day