எழுத்தின் அளவு: அ+ அ- அ
திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மட்டும் 16 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் பதிவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கஞ்சா கடத்தல், கள்ளச்சந்தையில் மதுவிற்பனை அதிகரிப்பு போன்ற காரணங்களால் பொது இடங்களில் மட்டுமின்றி பள்ளி, கல்லூரிகளிலும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு மட்டும் குழந்தைகளுக்கு எதிரான 4 ஆயிரத்து 968 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று 2023 ஆண்டு 4 ஆயிரத்து 581 வழக்குகளும், 2024-ஆம் ஆண்டு 6 ஆயிரத்து 920 வழக்குகளும் பதிவாகியிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 ஆயிரத்து 976 வழக்குகள் இன்னும் காவல்நிலைய விசாரணையிலேயே இருப்பதாகவும், 6 ஆயிரத்து 504 வழக்குகளில் மட்டுமே விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பர திமுக அரசின் ஆட்சியில் மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் காவல்துறை சட்டம், ஒழுங்கை கையாள்வதில் திணறி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.