விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க விளம்பர திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக, டெல்டா மாவட்டஙகளில் பெருமளவு விவசாயப் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்திருப்பதாகவும், அதற்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார். 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி மிகுந்த சேதமடைந்திருப்பதாகவும், இதனால் இன்னல்படும் விவசாயிகளின் துயர் துடைக்க எந்தவொரு நடவடிக்கையையும் திமுக அரசு எடுக்கவில்லை என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார். தமிழக முதலமைச்சரின் மாவட்ட ரீதியான ஆய்வு நடவடிக்கைகளால் எவ்விதப் பயனும் இல்லை என்றும், வீண் விளம்பரத்திற்காக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா புகார் தெரிவித்தார்.

Night
Day