எழுத்தின் அளவு: அ+ அ- அ
திமுக தலைமையிலான அரசின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை, தமிழக விவசாய பெருங்குடி மக்களுக்கு எந்தவித பயனும் அளிக்காத, ஏமாற்றத்தை அளிக்கக்கூடிய ஒரு சம்பிரதாய அறிக்கையாக இருப்பதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகளையும், விவசாயத்தையும் அழிக்கின்ற நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டு இருக்கும் திமுகவினரை விவசாயிகள் இனியும் நம்பப்போவது இல்லை என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவினருக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல் ஆண்டுதோறும் வேளாண்துறைக்கு தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ததன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என தெரிவித்துள்ளார்.
உண்மையை சொன்னால் திமுக ஆட்சி வந்தபிறகு விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் மோசமானதுதான் மிச்சம் - திமுக தனது தேர்தல் அறிக்கையில் சிறுகுறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் மற்றும் நகைக்கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று அளித்த வாக்குறுதியை நம்பி பெரும்பாலானோர் தங்களிடம் இருந்த சிறிய தங்க நகைகளை கூட அடகு வைத்து பெற்ற பணத்தை விவசாயத்தில் முதலீடு செய்தனர் - ஆனால் நடந்தது என்ன? திமுக அரசு விவசாயத்திற்கு போதிய பாசன வசதியை ஏற்படுத்தி தரவில்லை - காவிரி நீரை பெற்றுத்தருவதிலும் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார்.
விவசாயிகள் மிகவும் கஷ்டப்பட்டு விளைவித்த பயிர்களை, இந்த அரசு முறையாக கொள்முதல் கூட செய்யவில்லை என்றும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைவித்த பயிர்களுக்கு நிவாரணமும் வழங்கவில்லை என்றும் புரட்சித்தாய் சின்னம்மா சாடியுள்ளார்.
இதுபோன்று இந்த ஆட்சியாளர்கள் விவசாய பெருங்குடி மக்களின் இன்றியமையா தேவைகளை கூட பூர்த்திசெய்யாமல் அவர்களை கைவிட்டதனால், விவசாயத்திலும் லாபம் பெறமுடியாமல் கடுமையாக நஷ்டமடைந்தனர் - இந்த விளம்பரப்பிரியர்களின் வாக்குறுதிகளை நம்பி தங்கள் கையில் வைத்திருந்த தங்க நகைகளை அடமானம் வைத்து அதை இன்றைக்கு திருப்பமுடியாமல் இழந்ததுதான் மிச்சம் - இது திமுகவினர் தமிழக விவசாயிகளுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும் என புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் நெல்லுக்கான ஆதார விலை ஒரு குவிண்டாலுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தித்தரப்படும் என்றும், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையாக டன்னுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தமிழக விவசாயிகளுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அதை நிறைவேற்றிடாமல் இன்று வரை ஏமாற்றி வருகிறது - இந்த 2025-2026 ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையிலும் இது சம்பந்தமாக எந்தவித அறிவிப்பும் இடம்பெறவில்லை என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
திமுகவினர் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு புதிய திட்டங்களை அறிவிப்பதாக கூறுவது விவசாய பெருங்குடி மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது - இதுபோன்று திமுகவினர் தமிழக விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றி வருவது மிகவும் கண்டனத்திற்குரியது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
விவசாயத்திற்கு தேவையான பாசன வசதிகளை புதிதாக ஏற்படுத்துவதற்கான எந்த திட்டமும் இந்த அரசிடம் இல்லை - தமிழகத்தில் இருக்கின்ற நீர் நிலைகளை மேம்படுத்துவதற்கான எந்த சிறப்பு திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
பயிர் காப்பீட்டுக்காக கடந்த நான்கு வருடங்களுக்கு மொத்தம் 8 ஆயிரத்து 778 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இதுவரை 30 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தம் 5 ஆயிரத்து 242 கோடி ரூபாய்தான் பயிர் காப்பீடு தொகை கிடைக்கப்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது - திமுக தலைமையிலான அரசால் விவசாயிகளுக்கு வருடாவருடம் ஒதுக்கீடு செய்யப்படும் பயிர் காப்பீடு தொகையைக்கூட முழுமையாக கொடுக்க முடியவில்லை - இதன்மூலம் விவசாய பயிர் காப்பீட்டுக்கான மாநில அரசின் பங்கு தொகையும் திமுக தலைமையிலான அரசு முழுமையாக கொடுக்க வில்லை என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றைய திமுக தலைமையிலான ஆட்சியில் டெல்டா விவசாயிகளின் நிலைமையோ மிகவும் பரிதாபகரமாக உள்ளது - விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாமலும், எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியில் நெல்லை சாகுபடி செய்தாலும், அறுவடை செய்த நெல்லை தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் உரிய நேரத்தில் விற்பனை செய்ய முடியாமலும், டெல்டா விவசாயிகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர் - அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகளை தடுக்க எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவது இல்லை - திமுக ஆட்சியில் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிட்டது என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார்.
புரட்சித்தலைவி அம்மா, 2013 ஆம் ஆண்டு காவிரி நதி நீர் பங்கீடுக்கான காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வைத்தார் - அதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு உரிய காவிரி நீரை தராமல் மறுத்த போது, அதனை சட்டப்போராட்டத்தின் வாயிலாக பெறவும் செய்தார் என புரட்சித்தாய் சின்னம்மா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
ஆனால், திமுக தலைமையிலான அரசு கர்நாடகத்திலிருந்து காவிரி நீரை பெற்று தருவதில் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது - உச்ச நீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விட ஆணையிட்ட போதும், அதை நடைமுறைப்படுத்தாத கர்நாடக அரசிடமிருந்து, காவிரி நீரை கேட்டு பெற முடியாத, திமுக தலைமையிலான விளம்பர அரசின் இயலாமைதான், இன்றைக்கு தமிழக விவசாயிகளின் இத்தகைய அவல நிலைக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது என புரட்சித்தாய் சின்னம்மா கடுமையாக சாடியுள்ளார்.
தமிழகத்தில் சாகுபடி பரப்பு உயர்ந்துள்ளதாக உண்மைக்கு மாறான தகவல்களை கொடுத்து மக்களை ஏமாற்றுவது ஏன்? என வினவியுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, தமிழகத்தில் திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தனி நபர் வருமானம், தேசிய சராசரி தனிநபர் வருமானத்தை விட குறைவாக இருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு என்ன காரணம்? - விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கின்ற இப்பகுதி மக்கள், விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லாமல் நலிவடைந்து இருப்பதைத்தான் காட்டுகிறது - அவர்களது வருமானத்தை பெருக்குவதற்கான எந்தவித சிறப்பு திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
ஆனால், இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு திமுக ஆட்சியில் விவசாயிகள் மிடுக்கோடு இருக்கிறார்கள் என்று திமுகவினர் வாய்கூசாமல் உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி, நலிவடைந்துள்ள விவசாயிகளின் மனதை புண்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்? - திமுக தலைமையிலான அரசு ஆண்டுதோறும் விவசாயத்திற்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தும் என்ன பயன்? என புரட்சித்தாய் சின்னம்மா சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
திமுக தலைமையிலான அரசு இன்றுவரை விவசாயிகளின் நலனுக்காக எந்தவித பயனுள்ள திட்டங்களையும் கொண்டு வரவில்லை - இந்த 2025-2026ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு வெற்று அறிவிப்புகளை அளித்து, விவசாய பெருங்குடி மக்களை எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என்று கனவு காண்கின்றனர் - ஆனால், தமிழக விவசாயிகளையும், விவசாயத்தையும் அழிக்கின்ற நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டு இருக்கும் திமுகவினரை தமிழக விவசாயிகள் இனியும் நம்பப்போவது இல்லை - வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவினருக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.