விவசாயிகளை வஞ்சித்த வேளாண் பட்ஜெட்... குமுறும் கரும்பு விவசாயிகள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

2021 திமுக தேர்தல் அறிக்கையில் கரும்பின் ஆதார விலை 4ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என வாக்குறுதி அளித்த விளம்பர அரசு, 20 ரூபாய் ஊக்கத்தொகையை மட்டும் உயர்த்தி விவசாயிகளை பெரிதும் வஞ்சித்துள்ளது... கரும்பின் ஆதார விலையில் விவசாயிகளுக்கு அல்வா கொடுத்த அமாவாசை அரசு பற்றிய தொகுப்பை சற்று விரிவாக காணலாம்...

தமிழ்நாடு சட்டபேரவையில் 2024-2025ம் ஆண்டிற்கான  வேளாண் பட்ஜெட்டில் கரும்புக்கான ஊக்கத்தொகை 215 ரூபாயாக உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது...

இதை கண்ட கரும்பு விவசாயிகள், கழுத்தில் பச்சை துண்டை அணிந்து கொண்டு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், கரும்பு விவகாரத்தில் தங்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளதாக குமுறுகின்றனர்...

அதாவது கடந்த 3 ஆண்டுகளாக 195 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், கூடுதலாக 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு டன் ஒன்றுக்கான ஊக்கத்தொகையை 20 ரூபாய் உயர்த்தி 215 ரூபாய்  வழங்கப்படும் என வியாக்கியானம் கொடுத்துள்ளார் வேளாண் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம்

அதுவும் அறிவிப்பின் போது 215 ரூபாய் கூடுதலாக அறிவிப்பது போல் வாசித்து வேடிக்கை காட்டினார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்...

திமுக அரசு தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிப்படி தங்களுக்கு டன் ஒன்றுக்கான ஆதார விலை 4ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள், 400 ரூபாய் கூட்ட உயர்த்தப்படாததால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்...

தற்போது கரும்பின் ஆதார விலை டன் ஒன்றுக்கு 2,919 ரூபாயாக உள்ள நிலையில் ஆதார விலையை உயர்த்தாமல், ஊக்கத்தொகையை மட்டும் சொற்ப அளவில் உயர்த்தி தங்கள் வயிற்றில் ஈட்டியால் குத்தி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்...

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நான்கு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போதிலும், ஆதார விலையை உயர்த்தாமல், தங்களை வஞ்சித்து விட்டதாக விவசாயிகள் பொருமுகின்றனர்...

குறிப்பாக டெல்டா விவசாயிகள் தமிழக அரசின் வேளான் பட்ஜெட் பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்..

திமுக தேர்தல் அறிக்கையில் கரும்பு டன் ஒன்றுக்கு 4ஆயிரம் ரூபாயும், நெல்லுக்கு டன் ஒன்றுக்கு 2ஆயிரத்து 500 ரூபாயும் தருவதாக அறிவித்து 3ஆண்டுகள் கடந்த பின்னரும் திமுக அரசு வாக்குறுதியை நிறைவிற்றவில்லை என டெல்டா விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்...

கடந்த 3 ஆண்டுகளாக குறுவைக்கான பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டிய டெல்டா விவசாயிகள், நாகப்பட்டினம் முதல்  திருச்சி  வரை சுமார் ஆயிரம் கோடி ரூபாயில் விவசாய பேராண் தொழில் திட்டம் தொடங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது என கேள்வி எழுப்பி உள்ளனர்...

மொத்தத்தில் இந்த பட்ஜெட் பாவக்காயை சாப்பிட்டது போல கசப்பான பட்ஜெட்டாக இருப்பதாக விவசாயிகள் சாடுகின்றனர்...

நெல் மற்றும் கரும்பு விவசாயிகளை வஞ்சித்து விட்டு, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்போம் என விளம்பர அரசு கூறுவது முற்றிலும் ஏமாற்று வித்தை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்...

பட்ஜெட்டில் அறிவித்துள்ள திட்டங்களின் மூலம் இது ஒரு வெற்று பட்ஜெட் என்பது தெளிவாக தெரிவதாக குமுறும் விவசாயிகள், இது விஞ்ஞான ஊழலுக்கான பட்ஜெட் என விமர்சித்துள்ளனர்...

மொத்தத்தில் வேளாண் துறை பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்டாக அமைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்...

Night
Day