விவசாய நிலத்தை ஏமாற்றியதாகக் கூறி விளைநிலங்களில் இறங்கி மலைவாழ் மக்கள் போராட்டம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் தங்களுக்கு சொந்தமான நிலத்தை தனியார் தொண்டு நிறுவனம் அபகரிக்க முயற்சித்து வருவதாக கூறி, பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் விளைநிலங்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். 

அணைக்கட்டு வட்டத்திற்குட்பட்ட பீஞ்சமந்தை மலை ஊராட்சிக்கு உட்பட்ட தொங்குமலை கிராமத்தில் 45 ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையை சேர்ந்த சிலர் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்க வந்துள்ளனர். இதற்காக முத்து என்பவரின் தந்தை அண்ணாமலை தனது ஒரு ஏக்கர் 85 செண்ட் நிலத்தில்  சிறிது இடம் ஒதுக்கியுள்ளார். அதில் குடிசையமைத்து ஐந்து ஆண்டுகள் மட்டுமே கல்வி கற்றுக் கொடுத்த அந்த நபர்கள், அண்ணாமலையின் நிலத்தையும் தங்களது பெயர்களுக்கு பத்திரப் பதிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே அண்ணாமலை இறந்துவிட்ட நிலையில் முத்து குடும்பத்தினர் அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் நிலம் தங்களுக்கு சொந்தமானது என கூறி விரட்டியடிப்பதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து அதன் பேரில்  விசாரணை செய்த அதிகாரிகள் முத்து குடும்பத்தாருக்கு சாதகமாக கூறியுள்ளனர். ஆனாலும்  தொண்டு நிறுவனம் அடியாட்கள் மூலம் மிரட்டி வருவதால் பாதிக்கப்பட்ட முத்துவின் குடும்பத்தினர் முப்பதுக்கும் மேற்பட்டோர் விளைநிலத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

Night
Day