விவாகரத்து வழக்கு முடியும் வரை ஜீவனாம்சம் வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விவாகரத்து வழக்கு முடியும் வரை இஸ்லாமிய சட்டப்படி ஜீவனாம்சம் வழங்க உரிய பிரிவுகள் இல்லையென்றாலும் அரசியலமைப்பு உரிமையின்படி ஜீவனாம்சம் வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதகையை சேர்ந்த இஸ்லாமியப் பெண், விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது இடைக்கால ஜீவனாம்சம் வழங்க கோரி அப்பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மாதம் 30 ஆயிரம் ரூபாய் இடைக்கால ஜீவனாம்சமாக வழங்க கணவருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கணவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முஸ்லிம் திருமண முறிவு சட்டத்தில் விவாகரத்து வழக்கு முடியும் வரை ஜீவனாம்சம் வழங்குவதற்கு உரிய பிரிவுகள் இல்லை என்றாலும், அரசியலமைப்பு அளித்துள்ள உரிமையின் அடிப்படையில் ஜீவனாம்சம் தர வேண்டும் என்ற உதகை குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவு சரிதான் எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

varient
Night
Day