விவாகரத்து வழக்கு - இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்-சைந்தவி செப்.25-ல் ஆஜராக உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

விவாகரத்து வழக்கில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி இருவரும் வரும் செப்டம்பர் 25ம் தேதி நேரில் ஆஜராக சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் கடந்த 2013 ஆம் ஆண்டு பின்னணிப் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 12 வருட திருமண உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஜிவி பிரகாசும், சைந்தவியும் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்திற்கு நேரில் வந்து கடந்த மாதம் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் இருவரும் வரும் செப்டம்பர் 25ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Night
Day