விஷச்சாராய வழக்கு - சிபிஐ விசாரிக்க தடை இல்லை - உச்சநீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்த 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவ்விவகாரம் தமிழகம் மட்டுமின்றி நாடும் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், வழக்கை சிபிசிஐடி-யிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில் சிபிஐ வசம் வழக்கை ஒப்படைத்துள்ளதால் வழக்கு தாமதமாக கூடும் என தமிழ்நாடு அரசு கூறியிருந்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் என்ன ஆகிவிடப்போகிறது? என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், இவ்வழக்கில் தமிழக காவல்துறை ஏற்கனவே விசாரணையை முடித்து விட்டதாக வாதத்தை முன் வைத்தனர். ஆனால் தமிழக அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக் கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Night
Day