விஷூ பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடிய மலையாள மொழி பேசும் மக்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

விஷூ பண்டிகையை தமிழகத்தில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழகத்தில் தமிழ் புத்தாண்டாகவும், கேரளாவில் விஷூ என்ற பெயரில் மலையாள புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது. சேலம் ஐயப்பன் கோவிலில் விஷூ திருநாளையொட்டி ஜயப்பனுன்கு விசு கனி அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சேலம் சாஸ்தா நகர் திருக்கோவிலில் வெகு விமர்சையாக விசு கனி உற்சவம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகா கணபதி ஹோமமும், சிறப்பு அஷ்டபிஷேகமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பல்வேறு வகையான காய் மற்றும் கனிகளை ஐயப்பனுக்கு காய்,கனி அலங்காரத்துடன் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள ஐயப்பன் ககோயிலில் சிறப்பு அபிஷேம் மற்றும் வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இருமுட்டி கட்டி வழிபாடு செய்தனர். விசுவையொட்டி பக்தர்கள் தங்களால் இயன்ற காய்கறிகளை அன்னதானத்திற்கு தானமாக வழங்கினர்.

திருச்சியில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் விஷூ பண்டிகையை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடினர். மக்கள் தங்கள் வீடுகளில் கிருஷ்ணர் மற்றும் விஷூக் கணிக்கு பூஜைகள் செய்து குழந்தைகள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு விஷூ கனி நீட்டம் எனும் வழக்கத்தில் பணத்தை அன்பளிப்பாக அளித்தனர். கண்டோன்மென்ட்டில் உள்ள ஐயப்பன் கோயிலிலும் மணப்பாறை கிருஷ்ணர் கோயிலிலும்  வழிபாடு மேற்கொண்டனர்.

Night
Day