வீடு ஒதுக்க லஞ்சம் கேட்பதாக கூறி மீனவ மக்கள் மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவொற்றியூர் திருச்சினாகுப்பம் பகுதியில் மீனவர்களுக்கு ஒதுக்கிய வீடுகளை கொடுக்காமல் இழுத்தடிப்பதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு நிலவியது.

தமிழ்நாடு அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை மீனவர்களுக்கு ஒதுக்குவதற்காக 3 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் எனவும், முன் பணமாக 50 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் எனவும், அதிகாரிகள் கூறியிருந்தனர். இதனை அடுத்து மீனவர்கள் ஒவ்வொருவரும் 50 ஆயிரம் ரூபாய் என 360 வீடுகளுக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் கட்டி 4 மாதங்கள் ஆனபிறகும், வீடுகள் ஒதுக்காமல் அதிகாரிகள் அலைக்கழித்ததால்,  நகர்புற வாழ்விட மேம்பாட்டு அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர். அப்போது முழு தொகை கட்டினால் மட்டுமே வீடு வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியதால், சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day