வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம் - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்னிந்தியாவின் விடுதலை போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வரலாற்றை அவரது பிறந்தநாளில் போற்றி வணங்குவோம் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய சுதந்திர போராட்ட வீரராக திகழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளில் அவர்தம் வீர வரலாற்றை போற்றி வணங்கிடுவோம் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரரான வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்ட மறுத்து துணிவுடன் எதிர்த்து நின்றவர் - வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில், அவரது நினைவை போற்றும் விதமாக, புரட்சித்தலைவி அம்மா, வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மணிமண்டபம் அமைத்துள்ளதையும் இந்நாளில் நினைவுகூர விரும்புவதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.    

தென்னிந்தியாவின் விடுதலை போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வரலாற்றை நம் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில், அவர்தம் பிறந்தநாளைப் போற்றி நினைவில் கொள்வோம் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day