எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்திய சுதந்திர போராட்ட களத்தில் ஆண்களுக்கு இணையாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவரும், பெண்ணினத்தின் பெருமையாக விளங்கியவருமான வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவரது வீர வரலாற்றை போற்றி வணங்கிடுவோம் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய சுதந்திர போராட்ட களத்தில் ஆண்களுக்கு இணையாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு, வெற்றி கண்ட, வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தில் அவர்தம் வீர வரலாற்றை போற்றி வணங்கிடுவோம் என தெரிவித்துள்ளார்.
பெண்ணினத்தின் பெருமையாக விளங்கிய வீரமங்கை வேலு நாச்சியார், ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக மதித்து, அரவணைத்து, தன் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு போராடி பெண் சிங்கமாக வாழ்ந்தவர் என, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம் சூட்டியுள்ளார்.
கொல்லங்குடியை சேர்ந்த தமிழ் பெண் வெட்டுடையாளின் தியாகத்தையும், பாசாங்கரையைச் சேர்ந்த மற்றொரு தமிழச்சியான குயிலியின் தியாகத்தையும், மருது சகோதரர்களின் வீரத்தையும், வீரமங்கை வேலு நாச்சியாரின் சரித்திரத்தில் இருந்து யாராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது என்பதை இந்நாளில் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
சிவகங்கை சீமையின் ராணியாக, தன்னலம் பாராமல், நாட்டு மக்களை காப்பாற்றிய வீரமங்கை வேலுநாச்சியாரின் வீர வரலாற்றை இன்றைய இளம் வயதினர்களும் அறிந்துகொள்ளும் வகையில் அவர்தம் பிறந்த நாளைப் போற்றி நினைவில் கொள்வோம் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.