வெப்ப அலைகளை பேரிடர் மேலாண்மை திட்டத்தில் சேர்க்க நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வெப்பம் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியும் நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால் புழுக்கம் ஏற்பட்டு அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

வெப்ப அலையால் கோடைக்காலங்களில் மக்கள் பாதிக்கப்படுவதால் மத்திய அரசு தனது பேரிடர் மேலாண்மை திட்டங்களில் வெப்ப அலைகள் போன்ற பேரிடர்களை சேர்க்க வேண்டும் என நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. நடாளுமன்ற மாநிலங்களவையில் உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதன்படி, 'மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை திட்டத்தில் வெப்ப அலையின் தாக்கம் உள்ளிட்டவற்றை சேர்க்க இந்த குழு பரிந்துரைக்கிறது. பேரிடர் மேலாண்மை சட்டம் பொருத்தமானதாகவும், வளர்ந்து வரும் பேரிடர் அபாயங்களுக்கு ஏற்பவும் இருப்பதை உறுதிசெய்ய, வல்லுனர்கள் மற்றும் அனைத்து தரப்பினருடன் கலந்தாலோசித்து, பேரிடர் பட்டியலை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து புதுப்பிப்பதற்கான வழிமுறையையும் நிறுவ வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. 

Night
Day