வெறிச்சோடியது மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்... செல்போனில் மூழ்கி பொழுதைக் கழித்த அரசு ஊழியர்கள்...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமுக்கு பொதுமக்கள் வராததால் முகாம் வெறிச்சோடியது. விளம்பர திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் கூறுவது போல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களுக்கு குறைகளே இல்லையோ என நினைப்பதற்கு முன் உண்மை நிலவரம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.... 


தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் கோரிக்கைகளை நேரடியாக அரசு அலுவலர்களிடம் தெரிவித்து தேவைப் பெறுவதற்காக விளம்பர திமுக அரசு மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியது. நகரங்களில் வாழும் மக்களின் குறைகளையும் தேவைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக அறிவித்து நகரப்புற மக்களை வியப்பில் அதிர்ச்சியடையச் செய்தது விளம்பர திமுக அரசு. அடுத்ததாக ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களையும் பிரமிக்க வைப்பதற்காக ஊரகப் பகுதிகளுக்காகவும் மக்களுடன் முதல்வர் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.


இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள ஆயிரத்து 200 கிராம ஊராட்சிகள் மூலம் 15 துறைகளின் சார்பில் 44 சேவைகளை வழங்க சுமார் இரண்டாயிரத்து 500 முகாம்கள் வாயிலாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக இந்த அரசு  கூறி வருகிறது. 


இந்நிலையில் தான் இத்திட்டத்தின் மூன்றாம் கட்ட முகாம் எப்போது தொடங்கியது என்றே மக்களுக்கு தெரியாத நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் சார்பாக கொக்கராயன் பேட்டை, தட்டான்குட்டை ஊராட்சிகளுக்காக மூன்றாம் கட்ட முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. 

இந்த முகாமுக்கு ஏராளமான மக்கள் வருவார்கள், அவர்களில் சிலரின் எளிமையான கோரிக்கைகளை மேடையிலேயே நிறைவேற்றி விளம்பரத்திக் கொள்ளலாம் என்று நினைத்த விளம்பர திமுக அரசு அதிகாரிகளுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. 


இதைவிடக் கொடுமையாக முகாமில் மனு கொடுக்க வந்திருந்த விரல் விட்டு எண்ணக்கூடிய பொதுமக்களையும் அமைச்சரின் வருகைக்காக காக்க வைத்தது அவர்களின் விளம்பர நோக்கத்தை அம்பலப்படுத்தியது. காலை முதல் மதியம் வரை காக்க வைக்கப்பட்டதால் வெறுப்புக்குள்ளான மக்கள் தங்கள் மனக்குமுறலை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட காட்சிகளும் அரங்கேறியது.

நிலைமை இப்படி இருக்க முகாமிற்கு வந்த அதிகாரிகளோ எது நடந்தால் என்ன நீ ரசத்த ஊத்து என்பதைப் போல் தங்கள் செல்போனில் மூழ்கி பேஸ்புக், வாட்ஸ்அப் என சமூக வலைத்தளங்களில் உலாவியும் சக ஊழியர்களுடன் செல்ஃபி எடுத்தும் பொழுதை கழித்தனர்.


மொத்தத்தில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதை விட விளம்பர நோக்கத்திற்கு பெயரளவுக்கு தொடங்கப்பட்டது என்பதை இந்த முகாம் தமிழகத்திற்கு பறைசாற்றியுள்ளது.

varient
Night
Day