வெளிப்புற நோயாளிகள் பிரிவு காலை 8 முதல் 10 மணி வரை மட்டுமே இயங்கும் - ஜிப்மர் மருத்துவமனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்கும் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தொடர் போராட்டத்தால் ஜிப்மரின் வெளிப்புற நோயாளி பிரிவுகளில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் இன்று முதல் வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவுகள் காலை 8.00 முதல் 10:00 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது. அவசரப்பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்றும், உயிர்காக்கும் பராமரிப்பு தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் உரிய சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day