வெளியூரில் இருப்பது தெரிந்தும் சம்மன் ஒட்டியுள்ளனர் - சீமான்

எழுத்தின் அளவு: அ+ அ-

காவல்துறையினர் ஒட்டிய சம்மனை கிழிப்பதும் கிழிக்காததும் தங்கள் விருப்பம் என்று நாம் தமிழர் கட்​சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித் அவர், தான் வெளியூரில் இருப்பது தெரிந்தும் வீட்டில் சம்மனை ஒட்டியுள்ளதாக தெரிவித்தார். விசாரணைக்கு வருவதாக கூறியிருக்கும் நிலையில் காவல்துறை ஏன் அவசரம் காட்டுவதாக கேள்வி எழுப்பிய சீமான், தன் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சப்போவதில்லை  என்று தெரிவித்தார். இன்று மாலை 6 மணிக்‍கு கட்டாயம் காவல்துறை விசாரணைக்‍கு ஆஜராக போவதாகவும் சீமான் தெரிவித்தார். 

varient
Night
Day