வெள்ளிவிழா, பொன்விழா போல் அரசியல் சாசன நிகழ்ச்சியை கொண்டாடுவோம் - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார்

எழுத்தின் அளவு: அ+ அ-

வெள்ளி விழா, பொன் விழா கொண்டாட்டம் போல் அரசியல் சாசன நிகழ்ச்சியை கொண்டாடுவோம் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தெரிவித்தார். 


சென்னை பாரிமுனையில் உள்ள தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டு அரங்கில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 75வது இந்திய அரசியல் சாசன அமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் மற்றும் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் சுந்தரேஷன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி சுரேஷ் குமார், நமது அரசியல் சாசனத்தில் எப்பொழுதும் வழக்கறிஞர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும் அரசியல் சாசன அமைப்பு சட்ட நாள் தற்போது 75 ஆண்டுகளை கடந்து விட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார். 

varient
Night
Day