வேகமாக குறைந்து வரும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 176 அடி உயரம் கொண்ட முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு முற்றிலும் நின்றுவிட்ட நிலையில், வினாடிக்கு ஆயிரத்து 500 கனஅடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. கடந்த புதன்கிழமை அணையின் நீர்மட்டம் 133 அடியாக இருந்த நிலையில் இன்று 130. 20 அடியாக குறைந்துள்ளது. இந்நிலையில், வரும் கோடை காலங்களில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கான தண்ணீர் திறக்கும் அளவை சீராக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day