வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை - மார்ச் மாத விசாரணையில் 3 பேரையும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேங்கைவயல் விவகாரத்தில், தவறு செய்தவர்கள் என்று சிபிசிஐடி குற்றம்சாட்டிய 3 பேரையும் மார்ச் மாதம் 11-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, புதுக்கோட்டை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுகோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கிணற்று தண்ணீரில் மனித மலத்தை கலந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேர்தான் தவறு செய்தவர்கள் என சிபிசிஐடி போலீசார், புதுக்கோட்டை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இந்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வரும் மார்ச் மாதம் 11-ஆம் தேதி நடைபெற உள்ள அடுத்த விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  வேண்டுமென சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

Night
Day