வேங்கைவயல் விவகாரம் - விசாரணை மார்ச்.20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கும் நீதிமன்றம் மூலம் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை நகலை வழங்கியுள்ளனர். 

வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குற்றவாளிகளாக கூறப்பட்டுள்ள வேங்கைவயலைச் சேர்ந்த காவலர் முரளி ராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகிய 3 பேரும் இரண்டாவது நாளாக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்கள் ஏற்கனவே கேட்டுக்‍கொண்டபடி சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை நகல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மூலம் மூன்று பேருக்கும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை வருகிற மார்ச் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Night
Day